Tamil News
Home செய்திகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் The Hindu பத்திரிகை  செய்தி வெளியிட்டுள்ளது.

 இதேவேளை, நேற்று 4 தடவைகள் ஜனாதிபதி உட்பட 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாக பிரான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை பதவி விலகுவதாக சபாநாயகரிடம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை சபாநாயகர் அறிவிப்பார் என ஜனாதிபதி செயலகம் நேற்று தெரிவித்திருந்தது.

இதேவேளை, வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மக்களதும் அதிகாரிகளினதும் கடும் எதிர்ப்பு காரணமாக இன்று அதிகாலை அங்கிருந்து திரும்பிச்செல்ல நேரிட்டது ன்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version