ஐ.நாவில் அதிகாரம் செலுத்தும் அமெரிக்கா-அச்சத்தில் உலக நாடுகள்?

உலகளாவிய தொற்று நோயான கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்தக்கால கட்டத்தில், அனைத்து நாடுகளும் இதனைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகின்றன.

ஐ.நாவும் அதன் துணை அமைப்புக்களும் அனைத்து நாடுகளுடன் சேர்ந்து இந்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், அமெரிக்காவோ ஐ.நாவின் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் ஹெல்லி  கிராஃப்ட் , அமெரிக்க குடியரசின் செனட்டர் மார்ஸாவுடனான(Marsha Blackburn) உரையாடலின் போது ஐ.நாவின் தலைமைச் செயலகத்தை போர்க்கலமாகவும் அதில் பிற நாடுகளை அமெரிக்கா வெற்றி கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்களை ஐ.நாவிற்குள் கொண்டு வர, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கா, சீனாவினை எதிர்ப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பினையும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளும் எனவும் கூறினார். இது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் ஐ.நா சபைகளின் மீதான எதிர்மறை எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

இதன் அடிப்படையில் சீனா செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் மூன்று.

1.ஐ.நா சபை உலக மக்களுக்குப் பொதுவானது. இது அமெரிக்காவின் தனிப்பட்ட சொத்தல்ல.ஐ.நாவின் 75ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் நடைபெறும் வேளையில், சர்வதேச சமூகம், உலக அமைதி வளர்ச்சி, மற்றும் மனித உரிமைகள் குறித்தும் அதனைக்காப்பதற்கான வழிமுறைகளையுமே தேட வேண்டும். டிசம்பர் 31 2019 படி,ஐ.நாவில் சீனர்களின் பங்கு 1.17 சதவீதம் மட்டுமே. அமெரிக்கர்களின் பங்கு 4.79 சதவீதம். ஐ.நாவின் அறிக்கையின் படி, இது ஜி 7 நாடுகளின் சராசரி அளவான 2.60 சதவீதத்தினைவிடfக் குறைவானதாகும்.

2.ட்ரம்பின் நிர்வாகம், அனைத்து உலக நாடுகளுக்கும் எதிரான நிலையைக் கொண்டுள்ளது. அதி தீவிரப்பிரச்சனைகளான உலகளாவிய சூழலியல் மாற்றங்கள், உணவுப்பாதுகாப்பு, தொற்று நோய்கள் போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு உலக நாடுகளின் ஒற்றுமையே இன்றைய தேவையாகும்.  ஆனால் ட்ரம்பின் நிர்வாகம் ஒருதலைப்பட்சமான முடிவுகளையே எடுத்துள்ளது. 2017ம் வருடத்தில் இருந்து அமெரிக்கா, ஐ.நா மற்றும் அதன் சார்பு நிறுவனங்களுக்கான நிதி உதவியைக் குறைத்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களை நியமிக்கவும் தடையாக உள்ளது.

3.சீனாவின் செல்வாக்கினை ஐ.நாவில் குறைப்பதற்காக மோசமான அரசியலை ஐ.நாவில் அமெரிக்கா செய்து வருகின்றது. அமெரிக்காவும் சீனாவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளதால், இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு மிகவும் முக்கியமானதாகும். ஆனால் அதனைப்பற்றி பெரிதும் கவலை கொள்ளாமல் அமெரிக்கா எதேச்ச அதிகாரமாக நடந்துகொள்வது உலக அமைதிக்கு மட்டும் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய செயலாகும்.

ஐ.நா சபையில் 75 ஆவது ஆண்டில், சர்வதேச சமூகங்கள் ஒன்றாக இணைந்து எதேச்ச அதிகாரத்திற்கும் அமெரிக்காவின் அரசியல் அதிகார விளையாட்டுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, பல தரப்பட்ட நாடுகளின் தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும்.