உக்ரைன் மீதான ரஸ்யாவின் சிறப்பு படைநடவடிக் கையின் மூன்றாவது ஆண்டு நிறை
வினை முன்னிட்டு ஐக்கிய நாடு கள் சபையின் பொதுச்சபையில் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஸ்யாவுக்கு கண்டனம் தெரிவித் தும் கொண்டுவரப்பட்ட தீர்மானத் தின் இணை அனுசரணையாளராக பங்குவகிப்பதற்கு அமெரிக்கா முதல் முதலாக மறுப்பு தெரிவித் துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவான எல்லா தீர்மானங்களையும், ஐ.நாவில் கொண்டுவருவதற்கு அமெரிக்காவே முன்னர் முதன்மை யாக திகழ்ந்தது. ஆனால் தற் போது அமெரிக்கா அனு சரணை வழங்க மறுத்தது என்பது அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்ட பெரிய மாற்றம் என்பதுடன் மேற்குலக கூட்டணியிலும் ஏற்பட்ட மாற்றமாக கருதுவதாக த றொய்ட்டர் செய்தி நிறுவனம் கடந்த வியாழக் கிழமை(20) தெரிவித்துள்ளது.
உக்ரைன் அதிபர் வொலமடீர் செலன்ஸ் கிற்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்பிற் கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்துச் செல்வதையே இது காட்டுவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
அனைத்துலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் எல்லைகளை மீறி ஆக்கிரமித்ததாக ரஸ்யாவை கண்டிக்கும் வண்ணம் இந்த தீர்மானம் அமைந்துள்ளது. அதனை 50 இற்கு மேற்பட்ட நாடுகள் ஆதரித்துள்ளன.
இதனிடையே இந்த வாரம் சவுதி அரேபியாவின் தலைநகர் றியாத்தில் அமெரிக்க மற்றும் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுக்களில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டுள்ளது பலத்த சர்ச்சைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் அதிபர் சட்டவிரோதமாக தேர்தலை நடத்தாது நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும், முன்னர் கிடைத்த அமைதிக்கான சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளதாகவும் டிறம் குற்றம் சுமத்தியுள்ளார். உக்ரைன் அதிபரின் இந்த நடவடிக்iயால் உக்ரைன் 700,000 படையினரை இழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலதிக ஆயுதங்களை வழங்கினாலும் உக்ரைனினால் களமுனையில் வெற்றியை ஈட்ட முடியாது என அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.



