அமெரிக்காவின் பொருளாதார தடையே போராட்டத்திற்கு காரணம்- கியூபா அதிபர்

4880bd60b4d3fbbfa72f0657b9dd03d9 அமெரிக்காவின் பொருளாதார தடையே போராட்டத்திற்கு காரணம்- கியூபா அதிபர்

கியூபாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப் படுகின்றது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பொருளாதாரச் சரிவு மற்றும் கொரோனா நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கியூபாவில்  கடந்த 11ம் திகதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை அரசாங்கம் கைது செய்துள்ளது” என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கியூபாவில் நிலவும் பொருளாதார தட்டுப்பாட்டுக்கு அமெரிக்காவின் தடையே காரணம் என குற்றம் சுமத்தியுள்ள அந்நாட்டு அதிபர், நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக சமூக எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

கியூபா அதிபர் தியாஸ் காணல் புரட்சியாளர்கள் தங்கள் ஆதரவை அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அரசியல் ஸ்திரமின்மையை உறுதிப்படுத்தும் வகையில் தலையீட்டை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளதாக ரெட் பிஷ் இணையத் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்த பொருளாதார தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள கியூபா அதிபர், யார் அமெரிக்காவின் இந்தத் தடையை ஒரு போதும் தடுக்கவில்லையோ, அவர்கள் தான் கொரோனாவை கியூபா அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்”. என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 அமெரிக்காவின் பொருளாதார தடையே போராட்டத்திற்கு காரணம்- கியூபா அதிபர்