கொரோனாவிலிருந்து முழு விடுதலை என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் -அமெரிக்கா

Biden announces distribution of USD 1,400 COVID-19 relief payments to begin this month

உலகம் முழுதிலும் குறிப்பாக அமெரிக்காவில் அதிக உயிர்பலிகளை வாங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெற்று விட்டோம் என்று அறிவிக்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று அதிபர் ஜோ பைடன் தெரிவி த்துள்ளார்.

ஜோ பைடன் பேசுகையில், “உயிர்ப்பலிகள் வாங்கும் கொரோனா வைரஸிலிருந்து நாம் விடுதலை அடைந்து விட்டோம் என்று அறிவிக்கும் நாள் அருகில்தான் உள்ளது. இந்த வைரசுக்கு எதிராக நம் கை ஓங்கியுள்ளது.

என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். கோவிட்-19 இன்னமும் முற்றிலும் ஒழியவில்லை. டெல்டா உருமாற்ற வைரஸ் போல் சக்தி வாய்ந்த உருமாறிகள் தோன் றியுள்ளன என்பதை அறிவோம்.

கடந்த சில ஆண்டுகளாக நாம் இருண்ட காலங்களில் வாழ்ந்தோம். இப்போது நாம் நம் பிரகாசமான எதிர்காலத்தைப் பார்க்கப் போகிறோம். ” என்றார்.

அமெரிக்காவில் இது வரையில்  33 மில்லியன்  மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளனர். அதே நேரம்  இதுவரை 6 இலட்சத்து 5 ஆயிரம் பேர் அமெரிக்காவில் மர ணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு எதிராக 2 தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என்ற   அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்ட அமெரிக்கா, இப் போது கொரோனாவிலிருந்து முழு விடுதலை என்ற அறிவிப்புக்கு அருகில் உள்ளோம் என்று கூறியுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 கொரோனாவிலிருந்து முழு விடுதலை என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் -அமெரிக்கா