Tamil News
Home செய்திகள் சீரற்ற வானிலை: 13 மாவட்டங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலை: 13 மாவட்டங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

அத்துடன், அனர்த்தங்களின் விளைவாக இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் DMC இன்று (21) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், 174 வீடுகள் பகுதியளவிலும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 228 குடும்பங்களைச் சேர்ந்த 686 பேர் அவர்களில் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் DMC மேலும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version