Home செய்திகள் சீரற்ற காலநிலை: யாழில் 10,300 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை: யாழில் 10,300 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை

சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 194 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 111 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போது 4 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 44 குடும்பங்களைச் சேர்ந்த 153 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக  அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில்,இலங்கையில் பெய்து வரும் கன மழையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,30,185 ஆக அதிகரித்துள்ளதென இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அதே நேரம் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதுடன் ஒருவர் காணாமற் போயுள்ளார்.

Exit mobile version