Home செய்திகள் இலங்கையில் சீரற்ற கால நிலை-மன்னாரில் 3,501 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

இலங்கையில் சீரற்ற கால நிலை-மன்னாரில் 3,501 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,501 குடும்பங்களைச் சேர்ந்த 12,350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்தார்.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, புத்தளம், காலி, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 4300-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 63 குடும்பங்களைச் சேர்ந்த 250க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, 9 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், மன்னார் எழுத்துார் பகுதியில் உள்ள சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version