எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 3 வாரங்களாக மசகு எண்ணெய் கப்பலொன்று நங்கூரமிடப்பட்டுள்ள போதிலும், இதுவரை அந்த கப்பலுக்கான கட்டணம் செலுத்த முடியவில்லை. அதனை தவிர மேலும் 2 டீசல் கப்பல்களும் ஒரு வாரத்திற்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.