மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் பராமரிப்பற்ற நிலையில் குடிநீர் கிணறு- மக்கள் பாதிப்பு

IMG 20210713 122116 மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் பராமரிப்பற்ற நிலையில் குடிநீர் கிணறு- மக்கள் பாதிப்பு

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் பராமரிப்பற்ற நிலையில் குடிநீர் கிணறை தூய்மையாக்கி தருமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

மன்னார் நானாட்டான் பஜாரில் நானாட்டான் பிரதேச சபைக்கு சொந்தமான குடிநீர் கிணறு பல வருடங்களாக பராமரிப்பின்றி காணப்படுகின்றது.

கடுமையான வறட்சி காலத்திலும் வற்றாமல் இருக்கும் இந்த கிணறு சில வருடங்களுக்கு முன்பு அனைவருக்கும் குடிநீர் கிணறாக பாவிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கிணறு பராமரிப்பு இல்லாமல் மழை காலங்களில் கழிவு நீர் கிணற்றுக்குள் சென்று குடிநீரை அசுத்தப்படுத்துகிறது.  கழிவு நீர் வழிந்தோடுவதற்கு எந்த ஒரு முன்னேற்பாடுகளும் செய்யாமல் பிரதேச சபையே அதை சுற்றி கொங்ரீட் வீதியும் அமைத்துள்ளது.

இதனால் பொது மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றார்கள்.

குறிப்பாக  பேருந்துகள் தரிப்பிடத்தில் இரவு சேவையில் ஈடுபடும் அரசு பேருந்து சாரதி நடத்துநர்கள்  விளையாட்டு போட்டிகளின் போது வீரர்கள் வர்த்தக நிலையங்கள்  மூடப்பட்டு இருக்கும் விடுமுறை  நாட்களில் பயணிகள் குடிப்பதற்கு நீர் இன்றி பாரிய சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்து ள்ளார்கள்.

இது தொடர்பாக பிரதேச சபையில் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே விரைவாக இந்த குடிநீர் கிணற்றை சுத்தப்படுத்தி மக்களின் பாவனைக்கு உகந்தவாறு அமைத்து தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் பராமரிப்பற்ற நிலையில் குடிநீர் கிணறு- மக்கள் பாதிப்பு