ஆசிரியர்கள், அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்கவுள்ள பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக சமூகம் (FUTA) இன்று நண்பகல் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.

FUTA பிரதிநிதிகள் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பார்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளரான மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைக்கு பல தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை முன்னெடுத்து அவர்களின் ஆதரவை கோரியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருவதாகவும், திறந்த பல்கலைக்கழகத்திற்கு எதிரே இன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள், மீனவர்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் இணைந்து நவம்பர் 9ஆம் திகதி ‘தேசிய எதிர்ப்பு தினமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad ஆசிரியர்கள், அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்கவுள்ள பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்