தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா தன் படைகளை பயன்படுத்தும் -அதிபர் பைடன் எச்சரிக்கை

தைவான் மீது சீனா படையெடுத்தால், தைவானை பாதுகாக்க அமெரிக்கா தன் படைகளை பயன்படுத்தும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தைவான் குறித்த அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பானிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில்,ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில், தைவானை பாதுகாக்க அமெரிக்கா தனது படைகளை அனுப்புமா என பைடனிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, “ஆம் நாங்கள் உறுதியளித்துள்ளோம்.” என தெரிவித்தார்.

‘ஒரே சீனா’ என்ற கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கும் ஆனால் தைவானை வலுகட்டாயமாக சீனா கைப்பற்ற நினைத்தால் அது சரியல்ல என பைடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,பைடனின் இந்த கூற்று மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

Tamil News