ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்

8a22657932d74ce98cccc8e65f30bef8 18 ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்

அமெரிக்கப் படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் இருந்து வெளியேறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஈராக் இராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி மற்றும் ஆலோசனைகளை அமெரிக்கா வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த அதிபர் ஜோ பைடன் மற்றும் ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஈராக்கில் தற்போது 2,500 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன. ஐ.எஸ் குழுக்கு எதிரான சண்டையில், உள்ளூர் படைகளுக்கு அவர்கள் உதவி வருகின்றனர்.

ilakku-weekly-epaper-140-july-25-2021