பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்கிய அமெரிக்கா

பாதுகாப்புக்கு அதிக நிதி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறிய பின்னர், போரில் ஈடுபடுவதில்லை என தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது கடந்த ஆண்டைவிட பாதுகாப்புக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளார்.

777.7 பில்லியன் டொலர்களை இந்த வருடம் அமெரிக்கா பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளது. அதற்கான அனுமதியை செனற் சபை வழங்கியுள்ளது. சீனாவுக்கு எதிரான படை பலப்படுத்தல் என்ற காரணத்தை முன்வைத்து செனற் சபையிடம் ஆதரவுகள் பெறப்பட்டுள்ளன.

கடந்த 20 வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அதிக நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது ஆப்கான் போர் நிறைவுபெற்றதும் அமெரிக்கா சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது என  வோஷிங்டனை தளமாகக் கொண்ட போரில்லாமல் வெற்றியீட்டுதல் என்ற அமைப்பின் பணிப்பாளர் ஸ்ரீபன் மில்ஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் வர்த்தகம், இந்திய பசுபிக் பிராந்தி ஆளுமை, தென்சீனக்கடல் மற்றும் தாய்வான் போன்ற விடயங்களில் அண்மைக் காலமாக அதிக முரண்பாடுகள் ஏற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Tamil News