Tamil News
Home செய்திகள் பயிரிடப்படாத விளைநிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் -மஹிந்த அமரவீர

பயிரிடப்படாத விளைநிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் -மஹிந்த அமரவீர

இலங்கையில் பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து வருட காலத்திற்குள் காணி சுவீகரிக்கப்படும்.  அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்படவுள்ளது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது.   இது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தப்படும்.

அடுத்த அறுவடைக் காலத்தில், விளைச்சலை அதிகரிப்பதற்காக குறுகிய காலத்திற்கு இளைஞர்களுக்கு கையளிப்பதற்காக பயிர் செய்யப்படாத நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த முடியும். .

சுமார் 100,000 ஏக்கரில் நெற்செய்கைகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை.  நெல் பயிரிடப்படாவிட்டால் ஏனைய பயிர்களை பயிரிட முடியும் என்றார்.

Exit mobile version