Tamil News
Home செய்திகள் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு

இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெடரிகோ வில்லேகாஸ், நியூயோர்க்கில் நடைபெற்ற 77 ஆவது பொதுச் சபை அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பித்தார்.

2022 செப்டெம்பர் 12 முதல் ஒக்டோபர் 7 வரை நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களில் இலங்கை தொடர்பான தீர்மானமும் முக்கியமானதாக அமைந்திருந்தது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்த தீர்மானம் 20 க்கு 7 என்ற வாக்கு விகிதத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை இலங்கை மீதான தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கவேண்டியேற்படும்.

இந்தநிலையில் அண்மைய ஆண்டுகளில், மனித உரிமைகள் பேரவை, தமது அதிகரித்து வரும் பணிகளின் காரணமாக நிதிச்சவால்களை எதிர்கொள்கிறது என்று மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெடரிகோ வில்லேகாஸ் தெரிவித்துள்ளார். எனவே இலங்கை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபை, நிதியளிக்கவேண்டும் என்று ஃபெடரிகோ வில்லேகாஸ் கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version