ஆப்கானில் மனிதாபிமான உதவிகளை ஐ.நா செய்யலாம்- தலிபான்

ஆப்கானில் மனிதாபிமான உதவிகளை

ஆப்கானில் மனிதாபிமான உதவிகளைத் தாராளமாகச் செய்யலாம் என ஆப்கனுக்கான ஐ.நா தூதரிடம்  தலிபான் உள்துறை அமைச்சர் இசைவு தெரிவித்துள்ளார்.

தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானியுடன் ஆப்கனுக்கான ஐ.நா  தூதர் டெபோரா லயன்ஸ் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.
சிராஜுதீன் ஹக்கானி ஐ.நா.வின் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்தவர். அவரை உள்துறை அமைச்சராக தலிபான்கள் அறிவித்தனர்.

இதனால் தூதரக ரீதியான உறவுகளில் சிக்கல் ஏற்படும் எனக் கருதப்பட்டது.

இந்நிலையில் தான் ஹக்கானியை ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா தூதர டெபோரா லயன்ஸ் சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பின்போது ஐ.நா குழுவினர் ஆப்கனில் எவ்வித தங்கு தடையுமின்றி அனைத்துவிதமான முக்கியமான உதவிகளையும் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

இதனை  தலிபான்கள்  செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “இஸ்லாமிபி எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஹக்கானியும், ஐ.நா தூதர் டெபோரா லயன்ஸும் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானில் நிலவரம் குறித்தும் மனிதாபிமான உதவிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சர் ஐ.நா தடையின்றி உதவிகளைச் செய்யலாம் என்று கூறியுள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021