உக்ரைனின் நடக்கும் யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்-திருத்தந்தை ஃபிரான்சிஸ்

Pope coming to baslica in wheel chair

உக்ரைனின் நடக்கும் யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என  கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான  திருத்தந்தை  ஃபிரான்சிஸ்  வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு வாட்டிகன் சிட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் மாடத்தில் இருந்து, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான திருத்தந்தை  ஃபிரான்சிஸ் மக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்திய போது,

“உக்ரைனின் நடக்கும் யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.  மேலும் இந்த போரின் காரணமாக உக்ரைனில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதன் காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

உலகின் கோதுமை தேவையில் 30% கோதுமையை உக்ரைன் ஏற்றுமதி செய்கிறது. இந்த போரினால்உக்ரைனில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்

மேலும் ‘அமைதிக்கான இந்த மோசமான பஞ்சம் பிற பகுதிகளிலும், மூன்றாம் உலகப்போரின் அரங்கேற்றங்கள் நிகழும் இடங்களிலும் உள்ளது,” என்றும்  பிரான்சிஸ் தமது உரையில் குறிப்பிட்டார்.

தமது 10 நிமிட உரையில் பெரும்பாலான நேரம் யுக்ரேன் போர் குறித்தே திருத்தந்தை ஃபிரான்சிஸ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.