காசநோய் கிருமிகள் மூலம் சிறுவர்களை கொல்ல உக்ரைன் திட்டம் – ரஸ்யா

சிறுவர்களை கொல்ல உக்ரைன் திட்டம்

லுஹான்ஸ் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு காசநோயை (Tuberculosis-TB) பரப்பி அவர்களை கொல்வதற்கு உக்ரைன் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை (12) ரஸ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் உயிரியல் ஆயுதங்களான நோய் கிருமிகளை தயாரித்து வருவதாகவும், அதனை லுஹான்ஸ் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுவர்களிடம் பரப்பி அதன் பின்னர் அவர்களை விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்துவதே அமெரிக்காவின் திட்டம் எனவும் அது தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் சிக்கியுள்ளதாகவும் ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மிகவும் ஆபத்தான கிருமிகளை பரப்பி பின்னர் அதற்கான விலை உயர்ந்த மருந்துகளை தயாரிப்பதே அமெரிக்காவின் திட்டம். ஹாகோவ் பகுதியில் இதற்காக இரண்டு ஆய்வுகூடங்கள் நிறுவப்பட்டிருந்ததுடன், அவற்றை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் ரஸ்யா தெரிவித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உயிரியல் ஆய்வுகளுக்காக வோசிங்டன் 224 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News