Home செய்திகள் போலி கடவுச்சீட்டுகளை சமர்ப்பித்த ஈரானிய பிரஜைகள் இருவர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்

போலி கடவுச்சீட்டுகளை சமர்ப்பித்த ஈரானிய பிரஜைகள் இருவர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்

234 Views

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசித்து சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, அவர்கள் வந்த அதே விமானத்தில் மீண்டும் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு வருவதற்காக வீசா அனுமதியைப் பெறுவதற்காக குறித்த இருவரும் நோர்வே கடவுச்சீட்டுகளை முன்வைத்த போது, ​​அவை போலியானவை என குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version