அமெரிக்காவில் இரு வான்படை உலங்குவானூர்திகள் மோதல் – பலர் பலி

கடந்த வியாழக்கிழமை (30) அமெரிக்காவின் கென்தூக்கி பகுதியில் இரண்டு வான்படை உலங்குவானூர்திகள் மோதி விபத்துக்குள்ளானதால் பல படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எச்.எச்-60 பிளக்கெவ்க் ரக தாக்குதல் உலங்குவானூர்திகளே விபத்துக்குள்ளாகியுள்ளன. அதில் பயணித்த 9 படையினர் கொல்லப்பட்டதாக அந்த மாநிலத்தின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.

வழமைபோல வான்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக சென்றபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக போட் கம்பல் வான்படை தளத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வான்படையின் 101 ஆவது வான்நகர்வு படையணியின் உலங்குவானூர்திகளே அழிவடைந்துள்ளன. இந்த வான்நகர்வு படையணியே அமெரிக்காவின் ஒரேயொரு வான்நகர்வு படையணியாகும். இங்கு இருந்து தான் அனைத்துலக களமுனைகளுக்கு வான்நகர்வு படையணிகள் அனுப்பப்படுவதுண்டு.