துனிசியா கடற்பரப்பில் அகதிகள் சென்ற படகு விபத்து- 43 பேர் பலி

2696516 1481182740 துனிசியா கடற்பரப்பில் அகதிகள் சென்ற படகு விபத்து- 43 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரும் நோக்கில் 120-க்கும் மேற்பட்ட அகதிகள் சென்ற படகு துனிசியா கடற்பரப்பில் கவிழ்ந்ததில் 43 பேர்  உயிரிழந்தனர்.

படகில் இருந்த 84 பேர் துனிசிய கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் லிபிய துறைமுகமான ஜுவாராவிலிருந்து புறப்பட்ட படகு ஐரோப்பாவை நோக்கிச் செல்லும் வழியில் துனிசிய கடற்பரப்பில் கவிழ்ந்துள்ளதென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் கோடை விடுமுறைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆபிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பா நோக்கிச் சட்டவிரோகமாக செல்ல முயல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச் சோ்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு லிபிய துறைமுகமான ஜுவாராவிலிருந்து சென்றுகொண்டிருந்த நிலையிலேயே நேற்று படகு கவிழ்ந்தது.

படகின் இயந்திரம் செயலிழந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்ததாக ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது.

படக்கில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்களில் 3 முதல் 40 வயதானவர்கள் அடங்குவதாக துனிசியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.