Home செய்திகள் சுனாமி அனர்த்தம்: இலங்கையின் பல மாவட்டங்களில் நினைவேந்தல்

சுனாமி அனர்த்தம்: இலங்கையின் பல மாவட்டங்களில் நினைவேந்தல்

சுனாமி அனர்த்தம்

சுனாமி அனர்த்தம்: சுனாமி ஏற்பட்டு 16ம் ஆண்டு நினைவு நாள் இன்று உணர்வுபூர்வமாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் நினைவு கூரப்பட்டது.

கடந்த 2004 டிசெம்பர் 26ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர். இலங்கையில் மட்டும் முப்பத்தி ஐயாயிரம் பேர் வரையில்  உயிரிழந்தனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இன்று அதன் 16வது ஆண்டிநினை நினைவுகூரும் வகையில்நிகழ்வுகள் நடைபெற்றன.

திருச்செந்தூரில் சுனாமி பேரனர்த்தம் காரணமாக இப்பகுதியில் 243 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

அத்துடன் திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகமும் அல் ஹிதாயா மீனவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த  சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு இன்று  தோனா கடற்கரை மீனவர் சங்க கட்டிட வளாகத்தில் இடம் பெற்றது.

Exit mobile version