Tamil News
Home செய்திகள் சுனாமி ஆழிப்பேரலையில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி

சுனாமி ஆழிப்பேரலையில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 18 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு   மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழிப் பேரலை அனர்த்தம் இடம்பெற்றது. இதில் வடக்கு கிழக்கு பெரிதும் பாதிக்கப்பட்டது. பெருமளவிலான மக்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சுனாமி பேபி என்ற அழைக்கப்படுகின்ற அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தூபியில் இன்று அஞ்சலி செலுத்தினார்.

சுனாமி அனர்த்தத்தால் காணாமல்போய், பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தைக்கு அப்போது 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.

இதனால் அபிலாஷ் அன்றிலிருந்து ‘சுனாமி பேபி’ என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

பின்னர், மரபணு பரிசோதனை மூலம் அந்த குழந்தை மட்டக்களப்பு குருக்கள் மடத்தை சேர்ந்த ஜெயராசா தம்பதியின் மகன் என்பது உறுதிப்படுத்தப்பட்டு, பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தற்போது அபிலாஷுக்கு 18 வயது. அவரது இல்லத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அபிலாஷ் இன்று தனது பெற்றோருடன் இணைந்து சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.

Exit mobile version