இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் முறையாக பழங்குடியின பெண் வெற்றி

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 29ம் திகதி நடைபெற்றது. ஜூலை 18ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்று தற்போது அதன் முடிவு வெளியாகியுள்ளது.

வெற்றிப் பெற்ற திரெளபதி முர்மூவிற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.