மன்னாரில் பாரம்பரிய விவசாய நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னாரில் பாரம்பரிய விவசாய நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னாரில் பாரம்பரிய விவசாய நடவடிக்கை முன்னெடுப்பு: ‘பாரம்பரிய விவசாய செய்கை ஊடாக நஞ்சற்ற உணவு உற்பத்தி’ எனும் தொனிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவினால் மன்னார் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விவசாய செய்கையின் பாரம்பரிய விதைப்பு இன்று வியாழக்கிழமை (02)வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய முறைகளின் படி மாடுகள் அலங்கரிக்கப்பட்டு கலப்பை ஏற்றி உழுது கிழக்கு பார்த்து பண்டைய பாரம்பரிய நெல் விதை இனங்களான சின்னட்டி,மொட்டக்கறுப்பன் போன்ற முலை விதைகள் விதைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இணைப்பாளர் ஜாட்சன்பிகிறாடோ, மெசிடோ நிறுவன ஊழியர்கள் பாரம்பரிய விவசாய செய்கையாளர்கள் கலந்து கொண்டு விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த நெற் செய்கையின் போது முழுவதும் சேதன உரம் பயன்படுத்தப்படவுள்ளதுடன் அறுவடை நடவடிக்கைகளும் பாரம்பரிய முறையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad மன்னாரில் பாரம்பரிய விவசாய நடவடிக்கை முன்னெடுப்பு