பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்

teah 1 பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்

எதிர்வரும் திங்கட் கிழமை ஆரம்பிக்கவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலக அதிபர் ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளது.

அதன் அடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள பிரச்சினை தொடர்பில் அரசு இதுவரையில் சரியான தீர்மானம் தராத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்த பின்னர் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படா விட்டால் போராட்டத்தில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிச் செல்ல வேண்டியேற்படும் என்று நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதற்கமைய புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளோம்.

அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சை செயற்பாடுகளில் எந்தவொரு ஆசிரியரும் ஈடுபடாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கும், கல்வி அமைச்சின் செயலாளருக்கும் ஆசிரியர் சங்கத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை அறியத் தருகின்றோம்.” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021