விவசாய நிலங்களை சுற்றுலா அதிகார சபை அபகரிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

விவசாய நிலங்களை சுற்றுலா அதிகார சபை

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நிலாவெளியில் அமையப் பெற்றுள்ள ரசூல் தோட்ட தனியார் காணியினை மக்கள் 50 வருடகாலமாக விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இக் காணி சுமார் 68 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பழமை வாய்ந்த காணியாகும். இருந்த போதிலும் விவசாய நிலங்களை சுற்றுலா அதிகார சபை தங்களுக்கு சொந்தமான காணி என அடாத்தாக கையகப்படுத்தியுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் பராமரிப்பிலேயே தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 45 குடும்பங்களுக்கு சொந்தமான இக் காணியை அண்மையில் சிவில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் சுற்றுலா அதிகார சபையினர் அப்பகுதிக்கு சென்றதன் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.இருந்த போதிலும் காணி உரிமையாளர்கள் குறித்த காணி வழக்கு தொடர்பிலான விடயங்களை சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

றஸூல் தோட்ட காணியில் எமது மக்கள் விவசாய நடவடிக்கைக்காக தற்போது அண்ணளவாக 42 ஏக்கர் பரப்பில் தமது அன்றாட ஜீவனாம்சத்துக்கான தொழிலாக வெங்காயம்,கத்தரி,மிளகாய் உட்பட பல்வேறு பயிர்ச்செய்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் இவ்வாறிருக்க இக்காணிக்குள் அத்துமீறி நில அளவையில் அரச தரப்பினர்கள் தங்களுக்கு வசமாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள் இது பொது மக்களுக்கான விவசாய பூர்வீகமாகும் என அப் பகுதி முன்னால் பிரதேச சபை உறுப்பினர் எம்.டீ.சபீக் தெரிவித்தார்.

1982 ம் ஆண்டளவில் காணியை சுற்றுலா சபைக்கு சொந்தமாக வர்த்தமாணி அறிவித்தல் மூலமாக பிரசுரித்தததாகவும் தெரியவருகிறது .ஆனாலும் மக்களுடைய காணியே இது ஆரம்ப காலம் தொட்டு விவசாய செய்கை செய்து வருகின்றனர்.

பழமை வாய்ந்த இவ்வாறான காணிகள் யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்கள் சமாதானமான சூழ்நிலையில் வாழும் நிம்மதியான தருணத்தை இவ்  அரசு ஏற்படுத்த வேண்டும் அப்பாவி மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதை உடன் நிறுத்த வேண்டும்.

Tamil News