Home ஆய்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய தேவைப்பாடுகள் | க.மேனன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய தேவைப்பாடுகள் | க.மேனன்

இன்றைய தேவைக.மேனன்

மட்டக்களப்பின் இன்றைய தேவைப்பாடுகள்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது தமிழ் மக்களின் வாழ்க்கையிலும் பாரியளவிலான தாக்கத்தினை செலுத்தும் நிலையேற்பட்டுள்ளது.

கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியென்ற காரணத்தினால், வடகிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாழ்க்கையென்பது இன்றைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் பாரியளவிலான தாக்கத்தினை செலுத்தி வருகின்றது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் இலங்கையில் வறுமையின் உச்சம் கொண்ட மாகாணமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த வறுமை நிலையென்பது தமிழ் மக்கள் மத்தியிலேயே அதிகளவில் காணப்படும் விடயமாகவும் உள்ளது.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் என்பதை ஈடுசெய்ய முடியாத நிலையே இன்றும் காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் என்பது பல்வேறு வழிகளிலும் ஏற்பட்ட ஒன்றாகும்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலீடுகளை செய்து தமிழ் மக்களை மேம்படுத்த உதவ வேண்டும் என்றவேண்டுகோள்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டமானது இயற்கை வளங்கள் கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள வளங்கள் சரியாக பயன்படுத்தப்படுமானால், கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்களின் வறுமை நிலையை நீக்கமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்களை பொருளியல் நிபுணர்கள் அடையாளப் படுத்தியுள்ளனர். இந்த வளங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். புதிய தொழில்கள் உருவாக்கப்படும்போது அது தமிழ் சமூகத்தின் வளர்ச்சியில் பாரிய பங்காற்றும்.

வயற்றுப்பசியை வைத்துக்கொண்டு நாங்கள் போராட முடியாது. குறைந்தது வயிற்று பசியையாவது தீர்த்துக்கொண்டுவந்து எமது அடுத்தகட்ட நகர்வினை செய்யவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய தேவைப்பாடுகள், தொழில்துறைக்கான அடையாளப் படுத்தப்பட்டவைகள் கீழே தரப்பட்டுள்ளன. இவை இந்த மாவட்டத்தில் காணப்படும் சிறுதுளியேயாகும்.

மட்டக்களப்பில் அமைக்கக்கூடிய தொழில் வாய்ப்பைப் பெறக் கூடிய தொழில் துறைகள் மற்றும் அபிவிருத்தி செய்யக் கூடிய பாதுகாக்கப்பட வேண்டிய துறைகள்

01.தொழிற்சாலைகள்

  1. சீனி தொழிற்சாலைகள்
  2. ஓட்டு தொழிற்சாலைகள்
  3. அரிசி ஆலைகள்
  4. காகித ஆலை நவீன மயப்படுத்தல்
  5. மீன் பதனிடும் தொழிற்சாலைகள்
  6. பால் உற்பத்தி பொருள் தொழிற்சாலைகள்
  7. சோளம் சார்ந்த உணவுப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள்
  8. ஆயுள்வேத மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள்
  9. கனிய தொழிற்சாலைகள்
  10. ஆடை தொழிற்சாலைகள்
  11. பழங்களை கொண்ட குளிர்பான பழ Jam தொழிற்சாலைகள்
  12. மரமுந்திரிகை சார் உற்பத்தி தொழிற்சாலைகள்
  13. இயற்கை பசளைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்

01.அபிவிருத்தி செய்யக்கூடிய வளங்கள்

மட்டக்களப்பு வாவி மீன்வள அபிவிருத்தி

1.நன்நீர் மீன்வளர்ப்பு

2.இறால் வளர்ப்பு

கண்டல் தாவரங்கள் வளர்த்தல் (மீன் இனப் பெருக்கத்தை அதிகரிக்க)

02.தகவல் தொழில் நுட்ப மையம் (IT Park)

03.வெளிநாட்டு நிறுவனங்களை தொழிற்சாலைகளை எமது மண்ணை பாதிக்காமல் கலாச்சாரத்தை பாதிக்காத வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடல்

04.விவசாய அபிவிருத்தி

  1. விவசாய பண்ணைகள் அமைத்தல்
  2. சோளம் உற்பத்தியை அதிகரித்தல்
  3. கரும்பு உற்பத்தியை அதிகரித்தல்
  4. தானிய உற்பத்திகள் அதிகரித்தல்
  5. காளான் உற்பத்தி
  6. காளான் உணவுக்கு ஏற்றுமதி
  7. காளான் மருந்திற்கு ஏற்றுமதி
  8. கற்றாளை உற்பத்தி அதிகரிப்பு
  9. கற்றாளை ஏற்றுமதி
  10. தெங்குசார் உற்பத்திகளை அதிகரித்தல் ஏற்றுமதி செய்தல்
  11. பனை சார் உற்பத்திகளை அதிகரித்தல் ஏற்றுமதி செய்தல்
  12. விலங்கு வேளாண்மை பண்ணைகள் அமைத்தல்
  13. பழதோட்டங்கள் உருவாக்குதல்

05 பழஏற்றுமதி

  1. அன்னாசி
  2. மாம்பழம்
  3. வாழைப்பழம்
  4. பலாப்பழம்
  5. மரமுந்திரிகை
  6. தோடம்பழம்
  7. கொய்யா

06 விலங்கு வேளாண்மை

1.கால்நடை பண்ணைகள் அமைத்தல்

2.பால் பண்ணைகள் அமைத்தல்

  1. மேய்ச்சல் தரை அங்கீகரித்தல்

07.போக்குவரத்து அபிவிருத்திகள்

பிரதான வீதிகள் அபிவிருத்தி – யாழ்ப்பாணம் கொழும்பு கண்டியில் இருந்து மட்டக்களப்பை விரைவாக வந்தடையக்கூடிய வீதி அபிவிருத்திகள்

விமானசேவை அபிவிருத்தி (சர்வதேச விமான நிலையம் )

08.சுற்றுலா துறை அபிவிருத்திகள் அபிவிருத்தி

1.இயற்கை சரணாலயங்களை அபிவிருத்தி செய்தல்

(1.சத்துருக்கொண்டான் பறவைகள் சரணாலயம்

 2.கிரான்குளம் ஏத்தாளை குளம்)

2.மட்டக்களப்பு கடல் சார்ந்த சுற்றுலாதுறை அபிவிருத்தி

3.மட்டக்களப்பு கோட்டையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்தல் அங்கு தமிழர் பண்டைய பாரம்பரிய பொருட்களை காட்சிப்படுத்தல்

4.மட்டக்களப்பு வாவி இயற்கை அழகை பேணும் விதத்தில் அபிவிருத்தி

5.மட்டக்களப்பு வாவியினுள் தரித்து நிற்ககூடிய மற்றும் இரவில் தங்கக்கூடிய படகுச்சேவை (கேரளாவில் உள்ளது போல்)

6.மாந்தீவை சுற்றுலா தளமாக மாற்றி படகுச் சேவையை ஆரம்பித்தல்

7.எருமை தீவை சுற்றுலா தளமாக மாற்றி பாதை அமைத்தல்

  1. கொக்குத் தீவை அபிவிருத்தி செய்தல்

9.கீழ் குறிப்பிடும் இடங்களில் சுற்றுலா விடுதிகள் மையங்கள் (எமது வாழ்வியலை பண்பாட்டை இயற்கையை பாதிக்கா வகையில்) அமைத்தல்

  1. இயற்கையுடன் கூடிய குளங்களை புனரமைத்து அவற்றில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாட்டுடன் சுற்றுலாத்துறைக்கு ஏற்றாற்போல் போல் மாற்றுதல்

உதாரணம்

1.உன்னிச்சைக் குளம்

2.உறுகாமம் குளம்

  1. புழுகுணாவை குளம்

போக்குவரத்து சீர் இல்லாத சுற்றுலா இடங்களுக்கு சப்பாரி வாகன  முறையை போக்குவரத்திற்கு அறிமுகம் செய்யலாம்

1.நரிப்புல் தோட்டம் (மணிக்கல் )

2.குடும்பிமலை

3.புளுத்துமானோடை

4.கச்சிகொடி சுவாமிமலை

5.தாந்தமலை

6.நாவலடி

7.வாகரை

8சல்லித்தீவு

9.வெல்லாவெளி

10.முகத்துவாரம்

11.புல்லுமலை

12.உறுகாமம்

13.வாகனேரி

14.உன்னிச்சை

14.பொண்டுகள் சேனை

16.மாவடி ஓடை

17.வேலோடுமலை

18.குசலான மலை

19.கச்சைக்கொடி சுவாமிமலை

09.புதிய பிரதேச செயலகங்கள் அமைத்தல்

1.செங்கலடி பிரதேச செயலகம் (.கரடியனாறு செங்கலடி)

2.களுவாஞ்சிக்கூடி (1.கல்லாறு 2.களுவாஞ்சிக்கூடி)

3.வாகரை

10.புதிய பிரதேச சபைகள்

1.செங்கலடி (1செங்கலடி நகரசபை 2.வந்தாறுமூலை பிரதேச சபை)

3.மட்டக்களப்பு மாநகரசபை (மட்டக்களப்பு மாநகரசபை கல்லடி பிரதேச சபை)

  1. களுவாஞ்சிகுடி(களுவாஞ்சிகுடி நகரசபை கல்லாறு பிரதேச சபை)

11.புதிய நகரசபைகள்

1.செங்கலடி நகர சபை

2.களுவாஞ்சிகுடி நகரசபை

3.கல்லடி நகரசபை

12.புதிய கல்வி வலயங்கள்

1.பட்டிருப்பு – 2 வலயங்களாக பிரிக்கலாம் (களுவாஞ்சிக்கூடி வெல்லாவெளி)

2.கல்குடா -3 வலயங்களாக பிரிக்கலாம் (1.வாகரை 2.வாழைச்சேனை 3.செங்கலடி)

13.எமது மண்ணல் மண்ணுக்குரிய தமிழர் பண்டைய சின்னங்கள் ஆட்சி உரிமைகளை பாதுகாத்தல்

  1. ஆரையம்பதி
  2. வெல்லாவெளி

.3 பட்டிப்பளை – கச்சிக்கொடி சுவாமிமலை

  1. சித்தாண்டி
  2. கரடியனாறு குசனானமலை
  3. வந்தாறுமுலை
  4. வாகரை

8 குடும்பிமலை

  1. வாழைசேனை முனைமுருகன்
  2. தாந்தாமலை
  3. வெலோடு மலை
  4. குசலான மலை
  5. கச்சைக்கொடி சுவாமிமலை

14. தமிழர் பிரதேச வைத்தியசாலைகள் தரமுயர்த்தல் மற்றும் புனரமைத்தல்

  1.  நாவக்காடு வைத்திசாலை
  2. வாழைச்சேனை வைத்திசாலை
  3. மாவடிவேம்பு வைத்திசாலை
  4. செங்கலடி வைத்திசாலை
  5. சந்திவெளி வைத்திசாலை
  6. கரடியநாறு வைத்திசாலை
  7. மகிழவெட்டுவான் வைத்திசாலை
  8.  மகிழடித்தீவு வைத்திசாலை
  9.  மாங்கேணி வைத்தியசாலை
  10. தரவை வைத்தியசாலை
  11. மண்டபத்தடி வைத்தியசாலை
  12. உன்னிச்சை வைத்தியசாலை
  13. மண்டூர் வைத்தியசாலை

15.நீர்பாசனத் திட்டங்கள் அபிவிருத்தி

  1. கித்துள் உறுகாமம் குளங்கள் இணைப்பு
  2. வாகனேரி குளம் புனரமைப்பு

3 பெரிய நடுத்தர சிறு குளங்கள் புனரமைப்பு

  1. பண்டைய காலங்களில் போன்று மேட்டு நிலங்களில் ஆழ் கிணறுகளை தொட்டிகளை அமைத்து வரட்சியான காலங்களுக்கு தேவையான மழைநீர் சேகரிப்பு திட்டம்

16. அழிந்து வரும் மட்டக்களப்பின் பாரம்பரிய கலைகளை ஊக்குவித்தலும் பேணிப் பாதுகாத்தல்

17. மட்டக்களப்பு வாவியின் மீன் வளம் அதிகரிக்கும் இடங்களை கண்டறிந்து அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்

உதாரணம்

1.மாந்தீவு கரையோரப் பிரதேசம்

 2.எருமை தீவு அண்டிய களப்பு பிரதேசம்

  1. கொக்கு தீவை அண்டிய பிரதேசம்

18. சித்த வைத்திய ஆயுர்வேத வைத்திய மூலிகை காடுகளை உருவாக்குதல்

உதாரணம்

பல ஆயுர்வேத சித்த வைத்திய மூலிகைகள் தனித்துவமாக மட்டக்களப்பில் காணப்படுகின்றன. குடும்பிமலையை அண்டிய பிரதேசம், சித்தாண்டியை அண்டிய பிரதேசம்

  1. மட்டக்களப்புக்கு உரிய இயற்கை காடுகளையும் காட்டு வளங்களை காட்டு உயிரினங்களையும் பாதுகாத்தல்.

மாவட்டத்தில் மேற்குறித்த விடயங்களில் முதலீடுகள் செய்யப்படவேண்டும். இதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் தயாராக இருக்கின்றன.

நாங்கள் வெறுமனே கோசங்களை மட்டும் வைத்துக்கொண்டு தமிழர்களின் உரிமையினைப் பெற்றுவிட முடியாது. நாங்கள் உரிமையினைப் பெறுவதற்கு முன்பு எமது வளங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். மேற்குறித்த விடயங்களை பாதுகாப்பதன் மூலமும் முதலீடுகளை செய்வதன் மூலமும் கிழக்கு மாகாணத்தினைப் பாதுகாப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகளவில் உள்ளன. அவற்றினை செய்ய அனைவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

Exit mobile version