Home செய்திகள் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் 17வது ஆண்டு நினைவு நாள் இன்று- மட்டக்களப்பில் அஞ்சலி

மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் 17வது ஆண்டு நினைவு நாள் இன்று- மட்டக்களப்பில் அஞ்சலி

சந்திரநேருவின் 17வது ஆண்டு

படுகொலைசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அரசடியில் உள்ள அக்கட்சியின்  அலுவலகத்தில் இன்று(08)மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது.

2005ஆம் ஆண்டு வெலிக்கந்தை ஊடாக மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்தபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 இந்த நிகழ்வில்  கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்,

“தமிழ் மக்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராடிய பலர் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள்.அந்தவகையிலேயே தமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போராடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவை நாங்கள் நினைவுகூருகின்றோம்.

எந்த அழுத்ததிற்கும் அடிபணியாமல் தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து துணிந்து நின்று போராடியவர்கள், இவர் போன்று பலர் இந்த மண்ணில் மடிந்திருக்கின்றார்கள்.

இவர்களின் துணிவும் தியாகமுமே இந்த மண்ணில் தமிழர்கள் தலைநிமிர்ந்துவாழ காரணமாகவுள்ளது. 13வது திருத்தம் தொடர்பில் பலராலும் பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டுவருகின்றது. இன்று தமிழ் இனத்தின் மீது பாரிய சதிவலை வீசப்பட்டுள்ளது. இந்த சதியை நாங்கள் முறியடிக்கவேண்டும்”என்றார்.

Exit mobile version