Home செய்திகள் பட்டதாரி பயிலுனர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்குமாறு பட்டதாரி ஆசிரியர் பயிலுனர் சங்கம் கோரிக்கை

பட்டதாரி பயிலுனர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்குமாறு பட்டதாரி ஆசிரியர் பயிலுனர் சங்கம் கோரிக்கை

பயிலுனர்களை ஆசிரியர் சேவைக்கு

பட்டதாரி ஆசிரியர் பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என பட்டதாரி ஆசிரியர் பயிலுனர் சங்கம் வேண்டு கோள்விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பட்டதாரி ஆசிரியர் பயிலுனர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், பட்டதாரி பயிலுனர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்குமாறு பட்டதாரி ஆசிரியர் பயிலுனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

“பட்டதாரிகள் பயிலுனர் ஆசிரியர்களாக பாடசாலைகளிலே சுமார் ஒரு வருடத்தைத் தாண்டிய நிலையில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது ஏமாற்றப்பட்ட நிலையில் இருக்கின்றோம்.  கடந்த வருடம் செம்டெம்பர் மாதம் நாடளாவிய ரீதியில் அறுபதாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அது மிகவும் சந்தோசமானதொரு விடயம். அதனடிப்படையில் பட்டதாரிகளுக்கு ஐந்து கட்டப் பயிற்சிகள் நடைபெற்றது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டு அதன் பிற்பாடு பல பட்டதாரிகளின் விருப்பத்திற்கு இணங்க அவர்கள் பாடசாலைகளில் ஆசிரியர் பயற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

எனவே  தற்போது பயிற்சி ஆசிரியர்களாக கடமை புரியும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் என்ற அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என நாங்கள் கல்வி அமைச்சரை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version