Tamil News
Home செய்திகள் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி கூடி தீர்மானம் எடுக்க வேண்டும் என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அதற்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பிலான விளக்கம் தமக்கு வழங்கப்பட்ட பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளும் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Exit mobile version