புதுடில்லி செல்கின்றது கூட்டமைப்பு: மோடியுடனும் பேச்சுவார்த்தை

மோடியுடனும் பேச்சுவார்த்தைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தால் இது தொடர்பில் கூட்டமைப்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மோடியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறியப்படுகின்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சில காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தது. இதனடிப்படையில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழுவொன்று இந்தியாவுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரா சம்பந்தனுடன் மாவைசேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் டில்லி செல்வார்கள். அரசியல் தீர்வு திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவே கூட்டமைப்பு டில்லி செல்கின்றது.

கூட்டமைப்பின் பயணத்தின் பின்னர் ஏனைய சில தமிழ்க் கட்சிகளையும் டில்லிக்கு அழைப்பதற்கு அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தமிழ் முற்போக்கு கூட்டணியும் விரைவில் இந்தியா பயணிக்கலாம் என அறியமுடிகின்றது.