கோட்டா அரசுக்கு ஆதரவு வழங்குவதில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகல்

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்

கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து இன்று முதல் விலகியுள்ளனர். இதனை பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள், மிகவும் இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு உரிய தீர்வுகாணுமாறு நாம் முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லை. எனவே, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து இன்று முதல் தாம் விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம்,  எம்.எஸ். தௌஃபீக் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோர் இதுவரை காலம் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து செயற்பட்டு வந்திருந்தனர்.