Home செய்திகள் யாழில் நேற்றும் மூவர் மரணம்; புதிதாக 69 பேருக்கு தொற்று

யாழில் நேற்றும் மூவர் மரணம்; புதிதாக 69 பேருக்கு தொற்று

corona update 2 1 யாழில் நேற்றும் மூவர் மரணம்; புதிதாக 69 பேருக்கு தொற்றுயாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தனர். அதேவேளையில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புத்தூர் கிழக்கைச் சேர்ந்த 62 வயது ஆண் ஒருவரும், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 57 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 69 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 132 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வு கூடத்தில் 610 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே, 132 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதன்படி, யாழ்போதனா மருத்துவமனையில் 30 பேருக்கும், மானிப்பாய் பிரதேச மருத்துவமனையில் 13 பேருக்கும் பருத்தித்துறை ஆதாரமருத்துவமனையில் 11 பேருக்கும், சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், , ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் 3 பேருக்கும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 3 பேருக்கும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 2 பேருக்கும், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் சங்கானை பிரதேச மருத்துவமனையில் ஒருவருக்கும், இளவளை பிரதேச மருத்துவமனையில் ஒருவருக்கும் என யாழ். மாவட்டத்தில் 69 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குளம் பிரதேச மருத்துவமனையில் 14 பேரும், பளை பிரதேச மருத்துவமனையில் 4 பேரும், தருமபுரம் பிரதேச மருத்துவமனையில் 4 பேரும், உருத்திரபுரம் பிரதேச மருத்துவமனையில் 2 பேரும் 24 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இதேபோன்று, மன்னார் பொது மருத்துவமனையில் 13 பேருக்கும், மடு மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேருக்குமாக மன்னார் மாவட்டத்தில் 20 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வவுனியா பொது மருத்துவமனையில் ஐவர், செட்டிக்குளம் ஆதார மருத்துவமனையில் மூவர், நெடுங்கேணி பிரதேச மருத்துவமனையில் ஒருவர், பாவற்குளம் பிரதேச மருத்துவமனையில் ஒருவர் என்று 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 6 பேர் இனங்காணப்பட்டனர். இவை தவிர, இரணைமடு தனிமைப்படுத்தல் முhகமில் ஒருவருக்கும், காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டது.

Exit mobile version