Home செய்திகள் இந்திய ஃபோர்டு ஆலைகளை மூடத் திட்டம் –   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

இந்திய ஃபோர்டு ஆலைகளை மூடத் திட்டம் –   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

அமெரிக்க வாகனத் தயாரிப்பாளரான ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள இரு ஆலைகளை மூடுவதாக தெரிவித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பணியிழப்பு நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஓரகடம் மற்றும் குஜராத் சானந்த் ஆகிய இரு ஆலைகளையும் மூடுவதாக நிர்வாகம் செய்திகளை வெளியிட்டுள்ளது.

சென்னை ஓரகடத்தில் உள்ள ஆலையை முழுவதுமாக மூடுவதாகவும், சானந்த் ஆலையில் உள்ள அசெம்பிளி லைன் பகுதியை மூடுவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வாரமாக ஆலை மூடப்பட்டு தொழிலாளர்கள் கம்பெனி விடுமுறையில் இருந்தனர். செமிகன்டக்டர் சிப்ஸ் பற்றாகுறையினால் ஆலை விடுமுறை விடப்பட்டதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version