ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள் பாதுகாப்பாக பூமி திரும்பினர்

ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள்


ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள் கடந்த மூன்று நாள்களாக பூமியைச் சுற்றி வந்து விண்வெளிப் பயணிகள் தங்களது சாதனைப் பயணத்தை முடித்துக் கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலில்  பாதுகாப்பான தரை இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விண்வெளி வீரர்கள் அல்லாத சாதாரணமானவர்கள் மட்டுமே விண்வெளிக்குச் சென்று திரும்புவது இதுவே முதல் முறையாகும். இந்த பயணத்திற்காக இவர்களிடம் இருந்து ரூ.1500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக டைம் இதழ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இன்ஸ்பிரேஷன் 4 என்ற திட்டத்தின்படி கடந்த புதன்கிழமையன்று ஃப்ளோரிடாவிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் தலைமையில“ இவர்கள் புறப்பட்டனர். புளோரிடா நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவில் இருவர்கள் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.