திருமலை எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு – அமைச்சரவை அனுமதி

எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்குஎண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு: திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற் கான உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என்று அமைச்சரவை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட் டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங் கப்பட்டது.

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர் பில் ஏற்கனவே இந்தியாவுடன் உள்ள மூன்று உடன்படிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக அரசாங்கம் தெரிவித்தது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந் திரப் பேச்சுக்களை அடுத்து குறிப்பிட்ட எண்ணெய் குதங்களை கூட்டாக அபி விருத்தி செய்வதற்கான இணக்கம் காணப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகார மளித்தது.

இந்த யோசனையின்படி, 24 எண்ணெய்க் குதங்கள் இலங்கை பெற் றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப் படும். ஏற்கனவே லங்கா ஐ. ஓ. சிக்கு வழங் கப்பட்டுள்ள 14 எண்ணெய்க் குதங்களும் அவற்றின் நடவடிக்கைகளுக்காக தொடர்ந் தும் குத்தகைக்கு வழங்கப்படும். திருகோணமலை பெற்றோலியம் ரேர்மினல் என்ற பெயரிலான நிறுவனத் தின் மூலமாக ஏனைய 16 எண்ணெய்க் குதங்களும் பராமரிக்கப்படும்.

இதில் 51 வீதமான பங்குகள் இலங்கை பெற்றோ லிய கூட்டுத்தாபனம் கொண்டிருக்கும். இதேவேளையில், 49 வீதமான பங்குகளை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் கொண்டிருக் கும் என்று தெரிவிக்கப்பட்டது.