தியாக தீபம் திலிபனின் நினைவு தினம்: நினைவு தினம் அனுஸ்டிக்க மட்டக்களப்பில் தடை

தியாக தீபம் திலிபனின் நினைவு தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தியாக தீபம் திலிபனின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுவதற்கு எதிராக பல்வேறு தரப்பினருக்கும் நீதிமன்றங்கள் ஊடாக தடையுத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தியாக தீபம் திலிபனின் நினைவுதினம் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக அனுஸ்டிக்கப்படுகின்றது.

கோவிட் அச்சுறுத்தல் காரணமாக வடக்கில் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் அரசியல்கட்சி உறுப்பினர்கள் அவர்களது அலுவலகங்களில் தியாக தீபம் திலிபனுக்கு நினைவு தினம் அனுஸ்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் இம்முறையும் தியாக தீபம் திலிபனின் நினைவுதினத்தினை அனுஸ்டிக்காமல் தடுப்பதற்கான கடும் பிரயத்தனங்களை காவல்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தியாக தீபம் திலிபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதை தடுக்கும் வகையில் பலருக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

IMG 20210918 WA0012 தியாக தீபம் திலிபனின் நினைவு தினம்: நினைவு தினம் அனுஸ்டிக்க மட்டக்களப்பில் தடை

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,முன்னாள் போராளிகள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,இளைஞர் அணி தலைவர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் இந்த தடையுத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

தியாக தீபம் திலிபனின் நினைவு தினம் அனுஸ்டித்தால் அதற்கு எதிரானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் எனவும் அவ்வாறு செய்தால் மக்கள் அதிகளவில் ஒன்றுகூட சந்தர்ப்பம் உள்ளதாகவும் கோவிட் தொற்று அதிகரித்துள்ள காரணம் என்ற காரணத்தினால் குறித்த நிகழ்வுக்கு தடைவிதிக்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் ஊடாக நீதிமன்றங்களில் இந்த தடையுத்தரவுகள் பெறப்பட்டுவழங்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவானது ஜனநாயகத்தினையும் தனிமனித சுதந்திரத்தினையும் குழிதோண்டி புதைக்கும் செயற்பாடு என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021