இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அறிவிப்பு

ef989c4f richar 1 இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அறிவிப்பு

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு  தாக்குதலில் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப் படுவதற்கான போதுமான சாட்சியம் இதுவரை இல்லை என நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்ட விரோதமான கைது தொடர்பாக, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் (IPU) ஏகமானதாக எடுத்துள்ள தீர்மானத்தில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

உலகின் 179 தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும் 13 பிராந்திய நாடாளுமன்ற சபைகளினை அங்கத்துவமாகக் கொண்ட, தேசிய நாடாளுமன்றங்களின் மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகிய நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது மற்றும் தடுப்புக் காவல் தொடர்பாக விசாரணை நடத்தி, அவ்விடயம் தொடர்பான தனது முடிவை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பிபிசி