Tamil News
Home செய்திகள் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது-தலாய் லாமா கருத்து

இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது-தலாய் லாமா கருத்து

நான்கு ஆண்டுகளுக்குப் பின் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்நிலையில், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என தெரிவித்த தலாய் லாமா,இந்தியா மற்றும் சீனா தங்கள் எல்லை பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று   தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தலாய் லாமா பேசுகையில், இந்தியாவும் சீனாவும் போட்டி மற்றும் அண்டை நாடுகள். இரு நாடுகளும் விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிகளில் எல்லை பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராணுவ தளபதிகளின்  உயர்மட்ட 16-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இந்த பயணத்தை அவர் மேற்கொண்டதை சீனாவுக்கு ஓர் எச்சரிக்கை என பார்க்கப்படுகிறது.

Exit mobile version