Home செய்திகள் அமெரிக்காவும் அதிநவீன ஏவுகணை சோதனையை மேற்கொண்டது

அமெரிக்காவும் அதிநவீன ஏவுகணை சோதனையை மேற்கொண்டது

அமெரிக்காவும் அதிநவீன ஏவுகணை சோதனை

ஒலியை விட ஐந்து மடங்கு வேகம் கொண்ட மற்றும் அணுவாயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன ஏவுகணையை (Hypersonic missile) அமெரிக்காவும் பரிசோதித்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகம் இந்த வாரம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இத்தகைய ஏவுகணைகளை சீனா இரகசியமாக பரிசோதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அமெரிக்காவும் அதிநவீன ஏவுகணை சோதனையை அமெரிக்காவின் கடற்படை மற்றும் தரைப்படையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

பூமியை சுற்றிவந்து தனது இலக்கை துல்லியமாக தாக்கும் திறன்கொண்ட இந்த ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவிடம் இல்லாத நிலையில் சீனா இதனை பரிசோதித்திருப்பது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. எனினும் சீனா அதனை மறுத்துள்ளது.

இதனிடையே, இவ்வாறான ஏவுகணையை ரஸ்யா கடந்த வருடம் தனது கடல் பகுதியில் இருந்த கப்பலில் இருந்து ஏவி பரிசோதித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த ஆயுதப் போட்டி என்பது மூன்றாம் உலகப்போர் ஒன்று ஏற்பட்டால் குறுகியகாலத்தில் உலகம் அழியும் சாத்தியங்களை உருவாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version