ஆப்கான் பெண்களின் நிலை: ‘நம்ப முடியாத அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’ ஐ.நா கவலை

ஆப்கான் பெண்களின் நிலை

ஆப்கான் பெண்களின் நிலை: ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான தலிபான்களின் நிலைப்பாடு குறித்தத் தெளிவின்மை அந்நாடு முழுவதும் “நம்ப முடியாத அச்சத்தை” உருவாக்கியுள்ளது என ஐக்கிய நாடுகள் அவையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜ.நா மகளின் துணைத் தலைவர் அலிசன் டேவிடியன்“ ஆப்கானில் சில பெண்கள் ஆண் உறவினர்களின் துணையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்படுகின்றது. சில மாகாணங்களில் பெண்கள் வேலையை விட்டு நிற்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. வன்முறையிலிருந்து தப்பியோடும் பெண்களுக்கான பாதுகாப்பு மையங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன“ என்றார்.

அத்தோடு தினந்தோறும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து வெளியாகும் செய்திகளுக்கும் அவர் தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021