Tamil News
Home உலகச் செய்திகள் தொடர்ந்து அதிகரிக்கும் ரஸ்யாவின் ரூபிள்

தொடர்ந்து அதிகரிக்கும் ரஸ்யாவின் ரூபிள்

அதிகரிக்கும் ரஸ்யாவின் ரூபிள்

அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடையினால் கடந்த மார்ச் மாதம் கடுமையான வீழ்ச்சி கண்டிருந்த ரஸ்யாவின் நாணயமாக ரூபிள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் பொருளாதார நடவடிக்கைகளினால் மிகவிரைவாக அதிகரித்து வருகின்றது.

ஒரு அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபிளின் பெறுமதி கடந்த பெப்ரவரி மாதத்தின் இறுதியில் 150 ஆக வீழ்ச்சியடைந்தபோதும், கடந்த வியாழக்கிழமை (5) அதன் பெறுமதி 65 ஆகா அதிகரித்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கோவிட்-19 இற்கு முன்னர் இருந்த நிலையை விட அதிகமாகும்.

உக்ரைனில் இடம்பெறும் போரை தனது பொருளாதார வளர்ச்சிக்கு ரஸ்யா பயன்படுத்தி வருவதாக பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஸ்யாவின் பங்குச்சந்தைகளும் அதிகரிப்பை கண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version