சிறைகளில் தமிழர்களை வதைக்கும் இனவாதம் மாறவில்லை

சிறைகளில் தமிழர்களை வதைக்கும் இனவாதம்

இலங்கையின் கைதிகள் புனர்வாழ்வு மற்றும் பராமரிப்பு அமைச்சர் லெஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அடிமைகள் போல முழங்காலில் நிறுத்தி வைத்த சம்பவம் அரசியல் கைதிகள் மற்றும் பயங்கரவாத தடுப்புச்சட்டம் மூலம் சிறைகளில் தமிழர்களை வதைக்கும் இனவாதம் மாறவில்லை. இச்சம்பவம் தடுத்து வைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மத்தியில் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹன்னா சிங்கர் ஹம்டி அவர்களும் தனது கண்டனத்தை வெளியிட்டதுடன், கைதிகளின் உரிமைகளை மதித்து நடக்க வேண்டியது ஒரு நாட்டின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

அரசின் ஆதரவுடன் இலங்கையில் பல தடவைகள் தமிழ் கைதிகள் சிறைக்குள் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 1983 ஆம் ஆண்டு வெலிக்கடையிலும், 1997 ஆம் ஆண்டு களுத்துறையிலும், 2000 ஆம் ஆண்டு பிந்துநுவெவவிலும் படுகொலைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், தற்போதைய சம்பவம் தமிழ் மக்களிடம் கடும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக சமூகமும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 48 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முதல் நாள் இலங்கை அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது ஐ.நாவின் பரிந்துரைகளை இலங்கை அரசு ஒருபோதும் நிறைவேற்றப்போவதில்லை என்பதை காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021