விடுதலைக்கான பாடுகளின் பயன் விடுதலையின்  உயிர்ப்பு-சூ.யோ.பற்றிமாகரன்

விடுதலைக்கான பாடுகளின் பயன் விடுதலையின்  உயிர்ப்பு,எதையும் தாங்கி எழுதுதல் அமைதி ‘உங்களுக்கு அமைதி உண்டாகுக’ கிறிஸ்துவின் மொழியிலேயே ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துகள்.

2023ம் ஆண்டுக்கான உயிர்ப்புப் பெருவிழாவெனத் தமிழிலும் ஈஸ்டர் பெருவிழா என ஆங்கிலத்திலும் பாஸ்காப் பெருவிழா என இஸ்ரலேய மரபிலும் அழைக்கப்படும் பெருநாள் உலகெங்கும் கிறிஸ்தவர்களால் ஆன்மிக நிலையிலும் மற்றோரால் நுகர்வுப்பண்பாட்டின் மகிழ்ச்சி விழாவாக ஆடல் பாடல் காதல் கொண்டாட்டமாகவும் ஏப்ரல் 9ம் திகதி ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் வலிகள் துன்பங்களாக மாறிடாது கடந்து செல்லப்பட்டு அவற்றைத் தாங்கி மீண்டெழுதலே உயிர்ப்பு என்ற உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பத்துக்கும் இனத்துக்கும் நாட்டுக்கும் இயற்கையின் மாற்றத்தாலும் இஸ்ரயேலர்களின் ‘பாஸ்கா’ பெருவிழாவாலும் இயேசுக்கிறிஸ்துவின் சிலுவைமரணத்தின் பின்னான உயிர்ப்பின் வழியாகவும் உணர்த்தப்படுகிறது.

முதலில் ஈஸ்டர் என்ற ஆங்கிலச் சொல் மாரிகாலத்து கடும் இருள் நீக்கும் முதல் ஒளியாக வசந்தகாலத்து முதல்நாளான பகலும் இரவும் சரிசமமாக அமையும் ஓரைநாள் வந்ததின் பின் வரும் சூரியஒளி மக்களுக்கும் உயிர்களுக்கும் இயற்கைக்குமான புதிய வாழ்வளிக்கும் ஆறற்லாகி முன்னைய நிலைக்கு அவை மீண்டெழும் பேராற்றலாகுகையில், மரங்கள் துளிர்க்க மலர்கள் மலர எங்கும் பசுமை தோன்ற கோழிகள் இட்ட முட்டைகளில் இருந்து குஞ்சுகள் முட்டை ஓட்டைத் தம் சின்னஞ்சிறு அலகுகளால் உடைத்து தம் சொந்த முயற்சியால் வெளிவர முயல்கள் மாரியில் குளிருக்காக தம் திட்டமிடல்படி பாதுகாப்பாக முடங்கி பற்றைகளுள் பதுங்கியிருந்த நிலை மாற்றித் துள்ளிக் குதித்துப் பாய்ந்து வெளிவர, இவற்றையே இயற்கையின் உயிர்ப்புக்கான அடையாளச் சின்னங்களாகக் கொண்டு மனிதரும் மகிழ்ந்து கொண்டாடும் நாளாக ஓரையின் பின்வரும் மார்ச் – ஏப்ரல் மாதத்தில் அமையும் முதல் முழுநிலவு நாளில் வசந்தத்தை வரவேற்று ஆடல் பாடல் காதல் கொண்டாட்டத்துடன் பெருவிழாக்  கொண்டாடும் பழக்கம் ஈஸ்டர் பெருநாள் என்னும் வழக்கமாகியது.

கிரேக்க உரோமநாகரிக மரபில் பாலியல் மகிழ்வும் மதுரசச் சுவையும் பகைமையை அழிக்கும் வெறியுணர்வும் ஊட்டப்படும் தன்மைகள் கொண்டதாக இருந்த இந்த விழாவை உரோமப் பேரரசன் கொன்சன்டைன் சிலுவையைத் தாங்கித் தான் போரிட்டதாலேயே பெருவெற்றிகள் வந்தன எனக் கிறிஸ்தவனாகிய உடன், எந்த உரோமர்கள் கிறிஸ்தவத்தை கிறிஸ்தவ யூத இனஅழிப்பால் இல்லாதொழிக்க முயன்றார்களோ,  அதே உரோமர்களே உலகப் பெருமதமாக கிறிஸ்தவத்தை முன்னெடுக்கும் வரலாற்று மாற்றத்தை உருவாக்கினான்.

அதுவரை வீடுகளில் ஒளிந்து வாழ்ந்த கிறிஸ்தவ சமுகம் விடுதலை பெற்ற சமுகமாக உலகில் தலைநிமிர்ந்து வாழத் தொடங்கியது. எத்தகைய அடிமைத்தனமும் என்றும் நிலைத்திருப்பதில்லை விடுதலை வாழ்வு ஒவ்வொருவருக்கும் பிறப்பின் உரிமையாகும் என்ற உண்மை மீண்டும் நடைமுறையாகியது.

மாமன்னன் கொன்சன்டைனே  வசந்தகால ஓரையின் பின்வரும் முழுநிலவில் கொண்டாடப்பட்ட வசந்த வரவேற்புப் பெருவிழாவை வசந்தகால ஓரையின் பின்வரும் முழுநிலவை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என்னும் கட்டளையைப் பிறப்பித்து இன்றைய ஈஸ்டர் கொண்டாட்டத்தை கிறிஸ்து உயிர்ப்புக் கொண்டாட்டமாக உருவாக்கியவர்.

ஆய்வாளர் புரூஸ் பொர்பசின் ஆய்வு, ஆங்கில மரபில் பிரித்தானியாத் தீவுகளில் கிறிஸ்தவம் உரோமரால் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் ‘ஈஸ்டோர்’  என்னும் தேவதையே கொண்டாடப்பட்டது எனவும் வசந்தகாலத் தேவதைக்கான ஈஸ்டோர் என்ற சொல்லையே உலகின் சின்னஞ்சிறு தீவொன்றிலிருந்து கடல்கடந்த வர்த்தகத்தின் மூலம் உலகின் பென்னம்பெரிய பேரரசாக ஆங்கிலப் பேரரசை தங்கள் பிரித்தாளும் தந்திரத்தால் மக்கள் இனங்களைச் சிறு சிறு அலகுகளாக உடைத்துப் பண்பாட்டு மாற்றத்தால் மொழிகளை அழித்து வாழ்க்கை வழிகளைத் திசைதிருப்பித் தங்கள் மொழி தங்கள் பண்பாடு முதன்மையென அம்மக்களை நம்பவைத்து அவர்களின் ஆட்சிகளைத் தமதாக்கிய பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியே இந்த வசந்தகால வரவேற்புப் பெருவிழாவுக்கும் கிறிஸ்து உயிர்ப்பு விழாவுக்கும் ‘ஈஸ்டர்’ என மீள்பெயராக்கம் செய்தனர்.

தமிழில் வைணவப் பார்ப்பனர்களுடன் ஆரம்ப கால கத்தோலிக்க இயேசுசபைக் குருக்கள் பழகியதால் வைணவத்தில் குழந்தைக் கண்ணனை யசோதை வெளிப்படுத்திய பொழுது அவன் உயிராபத்தில் இருந்து மீண்டெழுந்ததைக் குறிக்கப் பயன்படுத்திய உத்தானம் என்ற சொல்லையே ‘ரெசரெக்சன்’ (‘சநளரசசநஉவழைn’ ) என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சமானமான தமிழ்ச் சொல்லாக அவர்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த வடமொழிச் சொல்லே ஈழத்தில் இன்று வரை உத்தானத் திருநாள் என இந்நாளை அழைக்க வைக்கிறது.

இனி இந்த வசந்தகாலப் பெருவிழா இஸ்ரயேலரின் மரபில் அவர்கள் நானூறு ஆண்டுகள் எகிப்பதில் அடிமைகளாக இருந்து என்றும் இருப்பவர் என்று பொருள்படும் யாவே’  கடவுளால் விடுவிக்கப்பட்டார்கள் என்ற நன்றியுணர்வின் அடிப்படையிலான பாஸ்காப் பெருவிழாவாக இருந்தது என்பது வரலாறு.

இஸ்ரயேலர்கள் வரலாற்றின் தொடக்கத்தில் அவர்களின் குலமுதல்வர்களில் ஒருவரான யாக்கோப்பு யாபோக்கு ஆற்றுத்துறையில் தனிமையாக இருந்த பொழுது ஒரு திடமிக்க ஆடவன் அவரை மற்போருக்கு அழைத்து அவர் போரிடுகையில் அவரை வெல்ல முடியாத அந்த ஆடவன் போர்மரபுக்கு மாறாக அவரின் தொடைச்சந்தில் அடித்து அதனை விலகச் செய்து அவரது வலிமையை வலியால் வெளிப்படுத்த இயலாது செய்து விட்டுப் போக முற்பட்டான்.

இந்நேரத்தில் யாக்கோப்பு அவரிடம் எனக்கு ஆசிதராமல் உம்மைப் போகவிடமாட்டேன் என கேட்டமைக்கு அமைய அந்த ஆடவன் யாக்கோப்பிடம் உம்பெயர் என்ன எனக் கேட்டார்.

அவர் யாக்கோப்பு எனச் சொல்ல அதற்கு அவர் பதிலுரையாக இனி உன் பெயர் யாக்கோபு எனப்படாது. இஸ்ரயேல்; எனப்படும் ஏனெனில் நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய் என்றார். இஸ்ரயேல் தன்னுடன் போராடியவர் கடவுள் என அறிந்து அந்த இடத்துக்கு இறைவனின் முகம் எனப்பொருள்படும் ‘பெனியேல்’ என்னும் பெயரிட்டார். அன்று முதல் இன்று வரை இஸ்ரயேலர்கள் கடவுளை ‘எல்- எலோகே – இஸ்ரயேல்’ இஸ்ரNயிலின் பேராற்றல் என்ற உள்ள உறுதியுடனேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த யாக்கோப்பிற்குப் பதினொரு பிள்ளைகள் இருந்தனர்.

இவர்களுள் கடைசி பிள்ளையான யோசேப்பு தான் அவரை அவருடைய உடன்பிறப்புக்கள் எகிப்திய வர்த்தகர்களுக்கு அடிமையாக விற்ற பொழுது எகிப்திய மன்னன் பார்வோனின் கனவுகளுக்குப் பொருள் உரைத்து எகிப்தைப் பஞ்சத்தில் இருந்து காக்க உதவினார். இதனால் யோசேப்பை அடிமைநிலையில் இருந்து விடுத்து எகிப்தின் ஆளுநராகவும் நியமிக்க யோசேப்பின் தந்தை யாக்கோப்பும் சகோதரர்களுமாக 71 பேர் எகிப்தில் குடியேறினர் இவர்களின் பின்னர் வந்த பரம்பரையினர் பல்கிப் பெருகி எகிப்திய மக்களுக்குச் சமமான மக்கள் தொகையாக மாறியதால் பின்னர் வந்த பார்வோன் மன்னன் இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு உத்திகள் மூலம் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரயேலர்களை அடிமைப்படுத்தினான்.

இதனால்செங்கல்லும் மண்ணும் 400 ஆண்டுகள் சுமந்து எகிப்பதியர்களின் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருந்த இஸ்ரேலிய மக்கள் தங்களை எகிப்திய மன்னன் பார்வோனின் கொடிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற மோயீசன் வழியாக உதவி, தங்களுடன்விடுதலைப்பயணத்தில் இறைவன்  பயணித்தமைக்கு நன்றி கூறும் தனிவிழா பெருவிழாவாகக் வலிகளைத் துன்பமாக நிலைக்க விடாது கடக்கவைத்த   பாஸ்காப் பெருவிழாவைக் கொண்டாடினர்.

பாஸ்கா என்ற கிரேக்கச் சொல்லுக்குக் கடத்தல் என்பதே பொருள். இதனால் இந்நாளில் முதலில் கடவுளுக்கு ஆண்டவரே என் ஆற்றல் – என்பாடல் – அவரே என் விடுதலை – என் கடவுள் அவரை நான் புகழ்ந்தேத்துவேன் – அவரே என் மூதாதையரின் கடவுள் அவரை நான் ஏற்றிப் போற்றுவேன் – போரில் வல்லவர் ஆண்டவர் – ஆண்டவர்’ என்பது அவர் பெயராம்’ என்னும் தங்கள் விடுதலைத் தலைவன் மோயீசனின் அதே நன்றியுணர்வுடன் இறைவனுக்கு நன்றிப்பாடல்களைப் பாடுவர்.

இதன்வழி கடவுள் கல்லில் அல்ல இன்னொருவர் காட்டித் தரக் காணும் பொருளம் அல்ல என்னில் நானாகவே உயிர்களில் அதாகவே சடத்துவப்பொருள்களில் அவற்றை அதாகவே வைத்திருக்கும் ஆற்றலாகவே சத்திகளில் அவற்றை அவையாக நிலைப்படுத்தும் பேராற்றலாகவே உள்ள மூலப்பேராறற்றல் என்பதால் கடவுள் வாழும் கடவுள் என்ற நம்பிக்கை யூதர்களால் வளர்க்கப்பட்டது.

இதனால் கடவுளால் ஆகாதது எதுவம் இல்லை என்ற உறுதியுடன் இஸ்ரயேலர்கள் தங்கள் வாழ்வை எதையும் எதிர்த்து எதையும் தாங்கி வாழும் ஆறற்லுடன் இன்று வரை தொடர்கின்றனர். இந்தத் தத்துவம் தமிழர் மெய்ப்பொருளியலிலேயே தோன்றி உலகப்பரம்பல் அடைந்த மெய்யியல். ஒவ்வொருவரும் தங்கள் முன்னுள்ள உயிர்களையும் உலகையும் இயற்கையையும் அவை  அவையாக நிலைத்திடச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த உழைப்பதே கடவுளுக்கு மனிதன் செய்யும் கடமை என்று ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ எனறு கூறிவிட்டு அத்தகைய உள்ள உறுதியுள்ளவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே ‘அஞ்சுவதும் ஒன்றுமில்லை அஞ்ச வருவதும் ஒன்றுமில்லை’ – ஆதலால் ‘நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என அறுபது அகவை தாண்டிய நிலையில் தன்னைக் கைதுசெய்ய வந்த பல்லவ மன்னன் காடவர் கோன் படைகளின் முன்பாகத் தமிழரின் தத்துவமாகத் துணிவுடன்  உலகுக்கு உரைத்து பாடலிபுரத்திலே உலக அரசியல் வரலாற்றில் முதன்முதலில் சத்தியாக்கிரகத்தை அரசுக்கு எதிரான அறவழிப் போராட்ட முறைமையாகத் தோற்றுவித்த திருநாவுக்கரசு வாமிகளின் கருத்தில் யூதர்களின் கடவுள் நம்பிக்கையைத் தெளிவாகக் காணலாம். ‘தனது உரை எனதுரையாக’ என ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும் இறையாற்றல் வெளிப்படும் எனவம், ‘திருநெறிய தமிழ் வல்லார் தொல்வினைகள் தீர்த்தல் எளிதாமே’ என்று தனது முதல் திருக்கடைக்காப்பிலேயே எடுத்துரைத்துத் ‘தமிழ்மொழிதான்’ எந்தத் தொன்மையான பிரச்சினைகளையும் தீர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதெனப் பிரகடனப்படுத்தியதும் அல்லாமல் தமிழால் அல்லாது எந்த மறைகாளாலும் கடவுளைக் கண்டு  அனுபவிக்கவே முடிhயது என்பதை  ‘ நின்னை நினைய வல்லவர் இல்லை நீள்நிலத்தே’ எனத்  தன் தந்தைக்கே திருஎழுக்கூற்றிருக்கையில் இடித்துரைத்த திருஞானசம்பந்த சுவாமகளின் கருத்தில் யூதஇனத்தின் மொழிப்பற்றைக் இனப்பற்றைக்காணலாம்.

சித்தத்தை சிவன்பபால் வைத்தால் செய்வது அத்தனையும் தவமாக்கும் அத்தன் – என மாணிக்கவாசக சுவாமிகள் வலியுறுத்திய உள்ளத்தில் உடன் உள்ளவன் கடவுள் என்ற உண்மையை யூததத்துவங்களிலும் நிறையக் காணலாம்.

தமிழ் அருளாளர்களுக்கு எல்லாம் தத்துவாசிரியையாகக் காரைக்காலம்மையார் கடவுளைக் குனிவலமாகப் பணிசெய்பவன் என தான் நிர்வாணமாக்கப்பட்டு புறம்தள்ளப்பட்டுச்  சுடலையில் இருந்து தன்னைத்தானே பேய் எனவும் பூதம் பெயரிட்டு பௌத்த சமண மதங்களில் பெண்களின் பெண்ணுரிமை பறிக்கப்பட்டமைக்குச் சான்று பகர்ந்த நிலையிலும் உறுதியுடன் உயிரின் செயற்பாட்டுக்குத் தோன்றாத் துணையாகத் துணையிருக்கும் பேரன்பு பெருங்கருணை கடவுள் என்ற கருத்தைத் தந்தமையைப் பார்க்கையில் தமிழரின் இறையுணர்வு சாதிமதநிற மொழி பேதங்களைக் கடந்து மனிதத்தை வாழவைக்கும் மனிதப் பேராறற்லாக மனிதரின் வழி வெளிப்படும் தன்மை கொண்டவன் கடவுள் என்ற கருத்து தமிழர்களின் மெய்யியலாகவே இருந்தது என்பதைத் தெளிவாக உணர்த்தும்.

தமிழ்ப் பாணர்களின் உலகப் பரம்பல் வழியில் உருவாகிய இஸ்ரயேலிய சமுதாயத்தின் குலமுதல்வர் ஆபிரகாமின் வழிவந்த யூத கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் ‘கடவுளே செயற்படுகின்றான்’  என்னும் யூதநம்பிக்கையிலும் – ‘கடவுளின் சித்தம்’ என்னும் கிறிஸ்தவ நம்பிக்கையிலும, ‘கடவுளின் ஆணை’ என்ற இஸ்லாமிய நம்பிக்கையிலும் காணலாம்.

இனி பாஸ்காவை யூதர்கள் கொண்டாடுவதற்கு மீளவும் வந்தால்  அவர்கள் இறைநன்றிப்பாடல்களைப் பாடிய பின்னர் வீட்டில் கடைசிப்பிள்ளையாக இருக்கும் பிள்ளை தாய்தந்தையரிடம் தங்கள் இனவரலாற்றைக் கூறும்படி கேட்க அங்குள்ள பெர்pயவர்கள் இஸ்ரயேலிய மக்களின் இனவிடுதலை வரலாற்றைக் கூறுவர்.

இவ்வாறு தங்கள் வரலாற்றைத் தங்கள் பரம்பரையினருக்குப் பாரப்படுத்தி ‘யூதமக்கள்’ என்ற தேசிய உணர்வைக் கட்டிக்காக்கும் அரசியல் திருவிழாவாகவும் பாஸ்கா பெருவிழா விளங்கியது. தங்களைக் கொடுமைப்படுத்திய பார்வோன் மன்னனின் ஆட்சிப் பகுதியை அழிப்பதற்கு இறைவனின் கோபாக்கினி இயற்கை உபாதைகளாக அப்பகுதியைக் கடந்து சென்ற பொழுது தாங்கள் செம்மறி ஆட்டை இறைவனுக்குப் பலிகொடுத்து அவர் ஆசி பெற்று அதன் இரத்தத்தைத் தங்கள் வீடுகளின் தலைவாயிலில் பூசி தங்களைப் பாதுகாத்த வரலாற்று நிகழ்வை நினைவுகூறும் முகமாகவும் இஸ்ரலேயர்கள் பாஸ்காவின் பொழுது செம்மறியாட்டைப் பலியாக வெட்டி அதன் இரத்தத்தை வாயில் கதவில் பூசி பாஸ்காவை தங்கள் வரலாற்றின் மீளுருவாக்கம் செய்வதைக் காணலாம்.

இந்த வகையில் தான் ஒவ்வொருவரும் யெருசலேம் பெருங்கோயிலுக்கு இந்தப் பாஸ்காப் பெருவிழாவுக்கு வரவேண்டும் எனனும் கட்டளை யூதர்களிடை இடம்பெற்றது. கிறிஸ்துவும் யூதஇனக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பாஸ்காவுக்குக் வந்த பொழுதே அங்கு காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவைப்பாடுகளை ஏற்று சிலுவையில் உயிர்நீத்த வரலாற்று நிகழ்வு நடந்தது. இதன் பின்னர் அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்ற நமப்pக்கையே கிறிஸ்தவத்தின் வேரும் விழுதுமாகி கிறிஸ்தவம் உலகப் பெருமதமாக மாறும் வரலாற்று நிகழ்வும் இடம்பெற்றது. இதனால் கிறிஸ்து புதிய பலியாடகவும் கிறிஸ்தவம் புதிய வாழ்வுக்கான சிந்தனையாகவும் கருதப்பட்டு கிறிஸ்து உயிர்த்த நிகழ்வும புதிய பாஸ்காப் பெருவிழாவாக உலகில் சுட்டப்படுகிறது.

கிறிஸ்து சிலுவையை அவமானத்தின் சின்னமாகப் பார்க்கவில்லை தன்னை மகிமைப்படுத்தும் சின்னமாகவே பார்த்தார். வலிகள் எப்பொழுதுமே மனிதரைத் திடப்படுத்தும், எதிர்ப்புச்சத்தியை வளர்க்கும், உறுதியுடள் செயற்படும் உள உடல் ஆற்றலைத் தரும் இயற்கையின் பகுதியாகவே உள்ளன என்ற உண்மை கிறிஸ்துவால் உறுதியாக வெளிப்படுத்தப்பட்டது. இதனாலேயே விடுவிப்பவர் என்னும் பொருள்படும் எபிரேயச் சொல்லான ‘ஓசன்னா’ என்பதை முழங்கி யெருசலேமுக்கு மக்களால் அமைதியைக் குறிக்கும் கழுதையில் உட்காரவைத்து வெற்றி தரும் அமைதியைக் குறிக்கும் ஒலிவ ஓலைகளைக் கையிலேந்தி ‘ ஓசன்னா ! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக.

இஸ்ரயேலரின் அரசர் போற்றப் பெறுக. ஏன அழைத்து வரப்பட்டு இயேசு அங்கு வழிபாட்டுக்கு வந்த கிரேக்கர்களிடை உரையாற்றுகையில் ‘மானிட மகன் மாட்சி பெறவேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொணடரும் இருப்பர்.

எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்’இ என்றார். இதன் வழியாக இயேசு சிலுவைப்பாடுகளை வலிகளை வேதனைகளை மானிட விடுதலைக்கான வித்துக்காளாக விழுதுகளாக அவை மாறும் என்கிற உறுதியுடன் அவற்றை எதிர்கொண்டதை உணரமுடிகிறது. இந்த உறுதிதான் இயேசு தம்மைக் கைது செய்ய கெதரோன் நீரோடைக்கு அருகில் இருந்ததோட்டத்திற்கு படையினர் வந்த பொழுது அவர்களிடம் நேரடியாகத் தானே சென்று யாரைத் தேடுகிறீர்கள் எனக் கேட்டார். அவர்கள் நசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம் என்றதும் ‘நான்தான்’ எனத் துணிவுடன் பதிலளித்து வலிகளை மனமுவந்து ஏற்கத் தயாராக உள்ள தன் மனநிலையை வெளிப்படுத்தினார். அவ்வாறே பாடுகளின் பின்னர் சிலுவையில் தன் உயிரைத் தானே தன் தந்தையாம் கடவுளிடம் ‘எல்லாம் நிறைவேறிற்று’ என ஒப்புவித்தார்.

அதுவரை தன் திருமகனின் பாடுகளைப் பார்த்து மௌனமாக இருந்த தந்தையாம் இறைவனும் அவர் உயிரைக் கையளித்துத் தம் தோற்றத்தின் கடமையை நிறைவு செய்த உடனேயே அவரின் கடவுள் தன்மையை உலகறியும் படி இயற்கையின் சீற்றத்தாலும் யெருசலேம் ஆலயத்து உடன்படிக்கைப் பேழையின் முன் இடப்பட்டிருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்ததின் மூலமும் வெளிப்படுத்தினார். இந்த வரலாற்று நிகழ்வுகள் ஒருவர் தம் கடமையைச் செய்வதற்காக எத்தகைய வலிகளையும் தாங்கிய அதனை நிறைவேற்றுகின்ற நேரத்திலேயே அவரில் நிலைகொண்டுள்ள கடவுளால் அவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும் என்பதை நிரூபித்தன. இதனையே வள்ளுவர்

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய மன்னுயிர் எல்லாம் தொழும் எனவும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் எனவும் இலகு தமிழில் அழகு மொழியாகக் குறளாக்கினார். மூன்றாம் நாள் கிறிஸ்து மரணத்தை வெற்றி கொண்டெழுந்த நம்பிக்கை என்பது கிறிஸ்தவத்தின் பிறப்பாகியது.

‘ உங்களுக்கு அமைதி உரித்தாகுக ‘ என்பதே உயிர்த்த இயேசுவின் முதல் மொழியாகியது. ஆமைதி என்பது எதனையும் தாங்கியெழுந்து அவையால் உள்ளம் பாதிக்கப்படாது உறுதியுடன் பணி தொடரும் ஆற்றல் என்பது கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழி உலகுக்கு உறுதியாக்கப்பட்டது. விடுதலைக்கான பாடுகளின் பயன் விடுதலையின் உயிர்ப்பு. எதையும் தாங்கி எழுதல் அமைதி. கிறிஸ்துவின் மொழியாலேயே ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக’ என்று இந்நன்னாளில் வாழ்த்துகிறேன்.

உலகில் சிறிய அளவான மக்கள் மேல் பெரிய அளவில் படைபலம் பாய்ச்சப்படும் பொழுது உயிராயுதமாகக் கொண்டு அதனை வெல்ல வேண்டும் என்கிற அரசியல் தத்துவத்தைத் தந்த புனித பவுலின் அழைப்பே உரோமர்கள் கிறிஸ்தவர்களை சிங்கத்துக்கு இரையாக கொல்லரங்குகளில் வீசி விட்டு வேடிக்கை பார்த்த உரோம ஆட்சியாளர்களின் கண்ணெதிரிலேயே மற்றைய கிறிஸ்தவ மக்கள் நூற்றுக்கணக்கில் வீசப்பட்டவருடன் சேர்ந்து கொல்லரங்குகளில் குதித்த பொழுது சிங்கம் பயந்தோட மக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான உரோமப்பேரரசையே கிறிஸ்தவத்தை முன்னெடுக்கும் பேரரசாக மாற்றியமை வரலாறு. அந்தப் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது திருமுகத்தில் கூறிய வார்த்தைகள் :-

‘அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும் அழிவுக்குரியது அழியாமையையும் சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும் போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்.

‘சாவு முற்றிலும் ஒழிந்தது.  வெற்றி கிடைத்தது.’ சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே? பாவமே சாவின் கொடுக்கு. பாவத்திற்கு வலிமை தருவது திருச்சட்டமே. ஆகவே நம் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி. எனவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உறுதியோடு இருங்கள். நிலையாய் நில்லுங்கள்.

ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாகச் செய்யுங்கள்’  என்பதாக உள்ளது. அந்தப்பணி என்ன என்பதை கிறிஸ்து ‘அழித்து அளித்தல்; என்ற பொருள்படும் ‘மொன்டி’ என்பதை கிறிஸ்து இறுதி விருந்தளித்த வியாழக்கிழமைக்கு அடைமொழியாக வைத்து மொன்டி வியாழன் அல்லது பெரிய வியாழன் எனக் கொண்டாடி மீளுருவாக்கம் செய்யும் நேரத்திலேயே அந்த இரவில் அவர் அளித்த புதிய கட்டளை அல்லது பொன்மொழி எனப்படும் ‘ ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவருக்கு அன்பு செலுத்துங்கள்.’ இதனையே மாவீர்கள் ஈழத்தமிழர் வரலாற்றில் செய்து விடுதலையின் உயிர்ப்பாக வரலாறு உள்ளவரை இவ்வுலகில் நிலைவாழ்வு பெற்றுள்னர்.