Tamil News
Home செய்திகள் இலங்கை கடன்களை செலுத்துவதை பத்து வருட காலத்திற்கு பிற்போடும் யோசனைய முன்வைத்தது பாரிஸ் கிளப் 

இலங்கை கடன்களை செலுத்துவதை பத்து வருட காலத்திற்கு பிற்போடும் யோசனைய முன்வைத்தது பாரிஸ் கிளப் 

இலங்கை கடன்களை செலுத்துவதை பத்து வருட காலத்திற்கு ஒத்திவைக்கும் யோசனையை பாரிஸ் கிளப் முன்வைத்துள்ளது என இந்துஸ்தான் டைமஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காகஇலங்கை கடன்களை செலுத்துவதை பத்து வருட காலத்திற்கு ஒத்திவைக்கும் யோசனையை பாரிஸ் கிளப் முன்வைத்துள்ளதுடன் கடன் மறுசீரமைப்பிற்கு 15 வருட கால அவகாசத்தை வழங்கும் யோசனையையும் முன்வைத்துள்ளது என இந்துஸ்தான்டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குளோபல் சவுத் நாடுகள் என அழைக்கப்படுகின்ற ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகள் குளோபல் நோர்த் போன்று ஹெயர் கட்டில் ஈடுபடவேண்டும்  என பாரிஸ்கிளப் வேண்டுகோள் விடுத்துள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Exit mobile version