கவலை தெரிவிப்பதனால் மட்டும் தீர்வு கிடைத்து விடாது; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

sugas கவலை தெரிவிப்பதனால் மட்டும் தீர்வு கிடைத்து விடாது; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
“கவலை தெரிவிப்பதனால் மட்டும் தீர்வு கிடைத்துவிடப் போவதில்லை. பொறுப்புக்கூறல் விடயத்தை சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அல்லது ஒரு தீர்ப்பாயம் இதற்காக உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமாக மட்டுமே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காணமுடியும்” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ்.

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை குறித்த உரையை நிகழ்த்தியுள்ள நிலையில் அது குறித்து கருத்து வெளியிட்ட போதே சுகாஸ் இதனைத் தெரிவித்தார்.

“கவலைப்பட்டுக் கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிடுவதால் எதுவும் நடைபெற்று விடப்போவதில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இங்கு தினசரி மரணமடைந்துவருகின்றார்கள். துரிதமான ஒரு நடவடிக்கையைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். ஒது ஒரு சர்வதேச விசாரணையாக இருக்க வேண்டும். இதனைவிட வேறு எதுவும் எமக்குத் தீர்வைத் தராவது.

ரோஹிங்கிய முஸ்லிம்களுடைய படுகொலைகள் தொடர்பாகவே சர்வதேச விசாரணைகளை நோக்கிய நகர்வுகள் ஆரம்பமாகிவிட்டன. ஆனால், எமது விடயத்தில் எதுவும் நடைபெறாமலிருப்பது கவலைக்குரிய விடயம்.

ஆவணங்கள், சாட்சியங்கள் சேகரிப்பதைப் பொறுத்தவரையில் அது சர்வதேச விசாரணைக்குப் பயன்படுத்தப்படுவதாக இருந்தால் அதனை நாம் வரவேற்கலாம். ஆனால், இந்தத் தகவல்கள் ஒரு கலப்பு நீதிப்பொறிமுறையின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டால் எதுவும் நடைபெறாது” எனவும் சுகாஸ் தெரிவித்தார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021