Tamil News
Home செய்திகள் அந்தாட்டிக்கா பனிப்பாறை உருகுவது உலகிற்கு ஆபத்தானது – விஞ்ஞானிகள்

அந்தாட்டிக்கா பனிப்பாறை உருகுவது உலகிற்கு ஆபத்தானது – விஞ்ஞானிகள்

அந்தாட்டிக்கா பகுதியில் உள்ள அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் அளவு கொண்ட Doomsday Glacier என்ற பெயருடைய பனிப்பாறை உருகுவது கடல் நீர் மட்டத்தை வெகுவாக அதிகரிப்பதுடன், பல நாடுகளுக்கு ஆபத்தாக அமையலாம் என International Thwaites Glacier Collaboration என்ற அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பனிப்பாறையின் அழிவு கடலின் நீர் மட்டத்தை அரை மீற்றர் உயரத்திற்கு உயர்த்துவதுடன், இந்த பாறையின் அழிவால் அருகில் உள்ள பாறைகளும் பாதிக்கப்படுவதால் நீர் மட்டம் 3 மீற்றர்கள் வரை உயரலாம். சூடான கடல் நீர் பனிப்பாறைகளின் பலவீனமான பகுதிகளுக்குள் ஊடுருவுவதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்து வருகின்றது.

ஒரு வருடத்திற்கு 5 மீற்றர் வரையான பனிப்பாளைகள் அழிவடைந்து வருகின்றன. இது எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவானது எனினும் ஆபத்தானதே.

இது எதிர்காலத்தில் பாரிய அழிவை ஏற்படுத்தும் என்றபோதும் எமது நடவடிக்கைகள் மூலம் அதனை தாமதப்படுத்தமுடியும் என விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version