Tamil News
Home செய்திகள் சர்வதேச பொருளாதார நிலை இருள்மயமானதாக காணப்படுகின்றது-சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச பொருளாதார நிலை இருள்மயமானதாக காணப்படுகின்றது-சர்வதேச நாணய நிதியம்

கடந்த மாதம் எதிர்வுகூறப்பட்டதை விடவும் சர்வதேச பொருளாதார நிலை இருள்மயமானதாக காணப்படுகின்றது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான பரந்துபட்ட அதிக பணவீக்கம் காரணமாக நிதிக்கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டமை ,சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைந்துள்ளமை,உக்ரைன் மீதான ரஸ்யாவின் போரினால் ஏற்பட்டுள்ள உணவு பாதுகாப்பின்மை மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியம் 2023 இல் உலக பொருளாதார வளர்ச்சி 2.7 வீதமாக காணப்படும் என தெரிவித்திருந்தது.

இந்தோனோசியாவில் இடம்பெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டின் தலைவர்களிற்காக தயாரித்துள்ள ஆவணத்தில் சர்வதேச பொருளாதார நிலை இருள்மயமானதாக காணப்படுகின்றது என்பதை சர்வதேச நாணயநிதியம் உறுதி செய்துள்ளது.

குறிப்பாக ஐரோப்பாவின் பொருளாதார நிலை மிகவும் நம்பிக்கையற்றதாக காணப்படுகின்றதுஎன  சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

Exit mobile version